Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 24 December 2013

GPANION" ஒரு பயனுள்ள சேவை....!





கூகிள்  பல இணைய சேவைகள் தந்தாலும் அதில் ஈமெயில் சேவையைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துவோம்.ஈமெயில் மட்டுமில்லாமல் கூகிள் பல பயனுள்ள சேவைகளை இப்பொழுது பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.


ஆனால் கூகிள் தரும் சேவைகள் பெரும்பாலும் “Hidden” சேவைகளாக இருப்பதால், அந்த சேவைகள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.


கூகிள் குழுமம் தரும் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில நாம் ஒருங்கிணைத்து செயல்பட ஒரு நல்ல தளம் இருக்கிறது.அதன் பெயர் " GPANION".
                           
                            தளம் :  GPANION


 இந்த தளத்திருக்கு கூகிள் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளுங்கள்.இந்த தளம் உங்கள் கூகிள் கணக்கை இணைத்துவிடும்.இப்பொழுது கூகிள் தரும் அனைத்து  சேவைகளும் டாஷ்போர்டில் தெரியும்.உங்களுக்கு தேவையான சேவையை எளிதாக பயன்படுத்திகொள்ளலாம்.நல்ல பயனுள்ள தளம் பயன்படுத்திபாருங்கள்.
·      

இந்த தளம் பிடித்திருந்தால் புக்மார்க் செய்து பயன்படுதிக்கொள்ளுங்கள்.

மருந்தாகும் கொய்யா இலை..!





கொய்யா மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது. இந்த இலையின் மருத்துவ பலன்களான ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களான வைட்டமின் சி, மற்றும் க்யூயர்சிடின், ஃபிளாவனாய்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. கொய்யா இலைகளை நன்கு கழுகி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்று போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும்.

வயிற்றுப்போக்கு

 பாக்டீரியா காரணமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டால் கொய்யா இலையில் தேநீர் செய்து சாப்பிடவேண்டும். இந்த தேநீர் பருகினால் எந்த காரணத்தினால் வயிற்றுபோக்கு ஏற்பட்டிருந்தாலும் குணப்படுத்திவிடும். கொய்யா இலையில் செய்யப்பட்ட தேநீரை பருகுவதால் குறைவான வயிற்றுவலி, குறைவான தண்ணீரால் வெளியேற்றப்படும் மலம், அதிலிருந்து எளிதில் தீர்வு காண முடியும். கொய்யா இலை வயிற்று போக்கிற்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று ரிவிஸ்டா இண்ஸ்ட்டியூட்டோ நிறுவனம் 2008 ஆய்வு செய்தனர் அதில் கொய்யா இலைசாறில் வயிற்று போக்குக்கு பொதுவான காரணமாக இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டது.

அதிக கொழுப்பு


 இளம் கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற நிறுவனம் 2010 ல் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்பாளர்களுக்கு கொய்யா இலையில் தயாரிக்கப்பட்ட தேநீரை பருக கொடுத்தனர். இந்த ஆய்வில் பங்கேற்ற பங்கேற்பாளர்களுக்கு குறைந்த மொத்த கொழுப்பு, குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புப்புரத நிலைகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருந்தது தெரியவந்தது. அடுத்த எட்டு வாரங்களுக்கு பிறகு கொழுப்பு அளவுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றது என தெரிவித்துள்ளது.

நீரிழிவு நோய்

 கொய்யா இலையின் குடும்பம் ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. நீரிழிவு நோயால் அவதிபடுபவர்கள் நீரிழிவை தடுக்க கொய்யா இலையை மருந்தாகப் பயன்படுத்தலாம். வகை 2 நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து இந்த தேநீரை பருகினால் சர்க்கரையின் அளவில் மாறுதல்கள் ஏற்படும். கொய்யா இலையை இளம தளிர் இலைகளாக பார்த்து ஒரு கப் இலை எடுத்துக்கொள்ளுங்கள். இலைகளை நன்கு கழுகி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

மறந்து போன மருத்துவ உணவுகள்....?




                                               பிரண்டைச் சத்துமாவு

 தேவையானவை:

நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ,

புளித்த மோர் – ஒரு லிட்டர்,

கோதுமை – ஒரு கிலோ,

கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.


செய்முறை:


பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும்.

பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும்.

இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.


மருத்துவப் பயன்:


உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.

வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள்!!!




காய்கறிகளே நமது தினசரி உணவுகளில் மிகுதியான அளவில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் இயற்கையான முறையில் தருபவை. காய்கறிகள் எத்தகைய நற்பண்புகளை பெற்றிருந்தாலும் அதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளதை நாம் மறுக்க முடியாது. சில காய்கறிகள் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அதிக அளவு வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, கீழ் வயிற்றை உப்பச் செய்கிறது. இதனால் உணவிற்கு பின் வயிறு உப்பிய நிலையில் இருந்து, பின்னர் அடிக்கடி வாய்வை வெளிவரச் செய்கிறது.


சிலருக்கு இத்தகைய வாய்வு பிரச்சனை அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை பல வடிவங்களில் கொண்டுள்ள காய்கறிகள் தேவையான அளவை விட அதிக அளவு வாய்வை உண்டாக்குகின்றன. இராஃபினோஸ், லாக்டோஸ், பிரக்டோஸ் மற்றும் சார்பிட்டால் ஆகியவை சர்க்கரையின் வடிவங்களாகும் மற்றும் இவை அதிக அளவு வாய்வை உண்டாக்கும் பொருட்கள். இராபினோஸ் என்ற சாக்கரை வகை அதிக அளவு உப்புசம் தந்து கீழ் வயிற்றில் வலியை உண்டாக்குகிறது. இது வாய்வுடன் தொடர்புடையதால் தான் இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. எப்படி இருந்தாலும் ஒருவருடைய உடல் வாகை கொண்டே இதை நாம் உறுதியாக கூற முடியும். ஒருவருக்கு ஒத்துப்போவது மற்றொருவருக்கு சரியாக வராது.


நல்ல காய்கறி சேர்த்த உணவை உண்ட பின் இத்தகைய இடையூறுகள் வாய்வு தொல்லையால் ஏற்பட்டால் அந்த காய்கறிகளை உட்கொள்ளுவதை குறைத்துக்கொள்வது மிக அவசியமானதாகும். வெங்காயம், கேரட், பிரஸ்ஸல்ஸ், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் தானிய வகைகள் ஆகியவை வயிற்றில் வாய்வு உண்டாக்கும் சில காய்கறிகளாகும். இவைகளை நாம் ஒரேடியாக நிறுத்தி விட முடியாது. ஏனெனில் இவற்றில் சத்துக்களும் மிகுதியாக உள்ளன. ஆகையால் இவ்வகை காய்கறிகளை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்வதும் மற்றும் நீண்ட இடைவெளி விட்டு உண்பதும் நல்லது.


ஆண்களுக்கு அதிக அளவில் கேஸ் உண்டாக்கும் காய்கறிகள் - ஓரு கண்னோட்டம்


நமது நாட்டில் எந்த இடமாயினும் வெங்காயம் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம். இது ஒரு அடிப்படை உணவில் கூட கலப்பதை தவிர்க்க முடியாது. வெங்காயங்களை சமைக்கும் பொது தவிர்க்கவும் முடியாது. ஆனால் அதை சிறிதளவு குறைத்துக் கொள்ள முடியும். இதைச் செய்வதன் மூலம் கேஸ் அடைவதிலிருந்தும் மற்றும் கேஸ் உருவாவதிலிருந்தும் தப்பிக்கலாம். வெங்காயத்தில் பல நற்குனங்கள் உள்ளதால், அதனை உணவில் தவிர்ப்பது சரியான செயல் அல்ல.

பிரஸ்ஸல்ஸ்

முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி ஆகிய தாவர வகையை சார்ந்த பிரஸ்ஸல்ஸ் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள் ஆகிய சத்து வகைகளை கொண்டுள்ளது. இவை சிக்கலான கார்போஹைட்ரேட் ஆகிய ஓலிகோ-சாக்கரைட்ஸ் எனப்படும் ஊட்டத்தை கொண்டவை. இவை அதிக அளவிலான காற்றை செரிமானத்தின் போது வயிற்றில் உருவாக்கும்.

சோளம்

சோளமும் ஒரு வகை பிரதானமான உணவாகும். அதில் அதிக அளவு சத்துக்களும் மற்றும் சுக்ரோசும் உள்ளது. அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை இதில் இருப்பதால் உணவு செரிக்கப்படும் போது கேஸ் ஏற்படுகிறது. இந்த உணவில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் செரிமானத்தை கடினப்படுத்தி அதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் சாக்கரை கேஸை உருவாக்குகிறது.

ப்ரோக்கோலி

முட்டைக்கோஸ் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ-கெமிக்கல்கள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாகும். இதில் பல நற்குணங்கள் இருந்தாலும், குடலில் இது உருவாக்கும் கேஸ் காரணமாக பலர் இதை தவிர்க்கின்றனர். ப்ரோக்கோலியில் உள்ள இராஃபினோஸ் என்ற சர்க்கரையை என்ஸைம்களால் செரிக்க வைக்க முடிவதில்லை. இதனால் கேஸ் உருவாகிறது.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் உடலுக்கு மிகவும் சத்து மிகுந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவாகும். அதே நேரம், இந்த கார்போஹைட்ரேட்களில் ஆலிகோ-சாக்கரைட்ஸ் என்ற சிக்கலான பொருட்களும் உள்ளன. ஆலிகோ-சாக்கரைட்ஸ்களை செரிமானம் செய்யும் போதும் அவற்றிலிருந்து கேஸ் உருவாகிறது.

பீன்ஸ்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட பீன்ஸில், ஒவ்வொரு வகைகும் ஒரு வகையான பலன்கள் உள்ளன. பீன்ஸில் ஸ்டாசியோஸ் என்ற மூன்று சாக்கரை பொருள், இராஃபினோஸ் என்ற நான்கு சாக்கரை பொருள் மற்றும் வெர்பாஸ்கோஸ் என்ற ஐந்து சர்க்கரைப் பொருள் ஆகியவை இருப்பதால் செரிமாணம் கடினமாகி விடுகிறது. இதை சமாளிக்கும் என்ஸைம்கள் நம் உடலில் இல்லை.

பீட்ரூட்

சென்சிட்டிவ்வான வயிற்று உறுப்புகள் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிட்டால், அதிகமான கேஸ் உருவாகி வயிற்று கோளாறுகள் ஏற்படும். அதனால் வயிறு உப்புசமடைதல், கீழ் வயிற்று வலி, கேஸ் பிரச்னை மற்றும் வயிற்று பிடிப்பு ஆகியவை ஏற்படும். பீட்ரூட்டில் உள்ள பாலிசாக்கரைட் என்னும் கார்போஹைட்ரேட் செரிப்பதற்கு கடினமானதாக இருப்பதால் அது கேஸை உருவாக்குகிறது.

ஆறு தவறுகள்!



1) அடுத்தவர்களை பின்னுக்குத் தள்ளியோ, அழித்தோ தான் சொந்த நலனைப் பெற முடியும் என்ற தவறான கருத்தைக் கொண்டிருப்பது:

இது குறுகிய காலத்திற்குப் பலன் தருவது போலத் தோன்றினாலும் நீண்ட காலத்திற்கு சிறிதும் உதவாத ஒரு வழியாகும். இயல்பாக நியாயமான வழிகளில் நாம் முன்னேறும் போது மற்றவர்களை முந்திக் கொண்டு செல்வது நேர்வழி மட்டுமல்ல நம் வளர்ச்சியும் இந்த வழியில் நிச்சயமானதாக இருக்கிறது. அதற்குப் பதிலாக மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளியும், அழித்தும் முந்தி நிற்க முயன்றால் அதற்கே நம்முடைய காலமும், சக்தியும் முழுவதும் செலவாகும். நாம் நின்ற இடத்திலேயே தான் நிற்க வேண்டி வரும். மேலும் அனைவரையும் பின்னுக்குத் தள்ளுவதோ, முன்னேற விடாது தடுப்பதோ நீண்ட காலத்திற்கு முடிகிற விஷயம் அல்ல. எந்தத் துறையிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெற விரும்புவோர் இந்தத் தவறான கருத்தை விட்டு விடுவது புத்திசாலித்தனம்.

2) மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விஷயங்களுக்காகக் கவலைப்படுவது:

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விஷயங்கள் கண்டிப்பாக இருக்கவே செய்கின்றன. அதற்கெல்லாம் கவலைப்படுவதும், கண்ணீர் விடுவதும் எந்த விதத்திலும் நமக்கு உதவப்போவதில்லை. நமக்காகப் பரிதாபப்பட்டு எதுவும் மாறி விடப் போவதில்லை. மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் அளவு மனம் இல்லா விட்டாலும் அவற்றை சகித்துக் கொள்ளும் அளவாவது பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் வாழ்க்கை முடிவில்லாத கவலையாகவே இருந்து விடும்.

3) நம்மால் செய்ய முடியாத செயல்களை யாராலும் செய்ய முடியாது என்று நினைப்பது:

நம் அறிவுக்கும் சக்திக்கும் எட்டாத விஷயங்கள் ஏராளமாகவே இருக்கின்றன. இன்று இருக்கும் எத்தனையோ அறிவியல் அற்புதங்கள் ஒரு காலத்தில் மனிதனால் கற்பனையாலும் கூட நினைத்துப் பார்க்க முடியாததாகவே இருந்திருக்கின்றன. சிசரோவின் காலத்தில் ரேடியோ, தொலைபேசி, விமானம், மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவை மனிதர்களுக்கு விந்தையிலும் விந்தையாக இருந்திருக்கும். அது போல இக்காலத்தில் நினைத்துப் பார்க்கவும் முடியாத எத்தனையோ அற்புதங்கள் எதிர்காலத்தில் சாதாரண சமாச்சாரங்கள் ஆகி விட முடியும். அப்படி இருக்கையில் தனி மனிதர்களான நாம் நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது என்று நினைப்பது கற்பனையான கர்வமாகவும், அறிவின் குறைபாடாகவே தான் இருந்து விட முடியும்.

4) உப்பு சப்பில்லாத சொந்த விருப்பு வெறுப்புகளையும், அபிப்பிராயங்களையும் தள்ளி வைக்க முடியாதது:


உலகையே உலுக்கும் சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. சமீபத்திய ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம், சுனாமி போன்றவற்றினால் லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து, உற்றார் உறவினர்களை இழந்து, சில நொடிகளில் தங்கள் வாழ்வின் பல கால உழைப்பின் செல்வத்தை இழந்து நின்று அவல நிலைக்கு வந்ததைப் பார்த்தோம். மனித வாழ்க்கையின் நிலைமை அந்த அளவு நிச்சயமற்றதாக இருக்கையில் நான் சொன்னது போல் அவன் நடக்கவில்லை, இவன் என்னை மதிக்கவில்லை, என்னிடம் விலை உயர்ந்த கார் இல்லை, என்னை அனாவசியமாக சிலர் விமரிசிக்கிறார்கள், சொன்ன நேரத்தில் வேலை நடக்கவில்லை என்ற சில்லறை விஷயங்களில் மனம் கொதிக்கிற அல்லது வெம்புகிற மனோபாவம் நகைக்கப்பட வேண்டியதே அல்லவா? நான் பெரியவன், அதை எல்லாரும் அங்கீகரிக்க வேண்டும், என்னைக் கவனிக்க வேண்டும், என் விருப்பப்படி அனைத்தும் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணங்களை ஒதுக்கி வைக்க முடியாதது குறுகிய மனங்களின் சாபக்கேடு. எந்தப் பெரிய பிரச்னைகள் இல்லா விட்டாலும் இந்த மனோபாவம் இருந்து விட்டால் அது போகும் சுகவாழ்வையும் நரகமாக மாற்றுவதற்கு.

5) மனதைப் பண்படுத்தவும், பக்குவப்படுத்திக் கொள்ளவும் தவறுவது மற்றும் நல்ல நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது:

வாழ்க்கையில் சௌகரியங்களையும் செல்வத்தையும் அதிகரித்துக் கொள்ள மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைக்கிறான். ஏனென்றால் அதை அளக்க முடிகிறது. மற்றவர்கள் அதை வைத்துத் தான் மதிக்கிறார்கள் என்ற சிந்தனையையும் பொதுவாக எல்லோரிடமும் பார்க்க முடிகிறது. ஆனால் மனம் அந்த அளவு வெளிப்படையாகத் தெரிவதில்லை என்பதால் அதைப் பண்படுத்திக் கொள்ளவோ பக்குவப்படுத்திக் கொள்ளவோ பெரும்பாலான மனிதர்கள் பெரிதாக முயற்சி மேற்கொள்வதில்லை. ஆனால் உண்மையில் தனி மனித நிம்மதியும், மகிழ்ச்சியும் அவன் மனதின் பக்குவத்தை மட்டுமே பொருத்தது. சேர்த்த செல்வமும், அடைந்த புகழும் அடுத்தவர்கள் கண்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தலாமே ஒழிய மனதை அவை எல்லாம் நிரப்பி விடுவதில்லை. கல்வியும் பெரும்பாலான மக்களுக்குக் கல்லூரிகளோடு முடிந்து விடுகிறது. நல்ல தரமான நூல்களை அதற்குப் பிறகும் படித்து அறிவையும், பண்பாட்டையும் வளர்த்துக் கொள்ளும் பழக்கம் குறைவான மக்களிடத்திலேயே இன்றும் உள்ளது.


6) நம்மைப் போலவே நினைக்கவும் வாழவும் அடுத்தவர்களைக் கட்டாயப்படுத்துவது:

’நான் நினைப்பது தான் சரி, என்னுடைய வழிமுறைகள் தான் சிறந்தவை’ என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. அப்படி நினைப்பதோடு நின்று விடாமல் அடுத்தவர்களையும் அப்படியே நினைக்கவும், நடந்து கொள்ளவும் எதிர்பார்ப்பதும் கட்டாயப்படுத்துவதும் மிகப்பெரிய குற்றம். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நிறைய மனிதர்களிடம் இந்தக் குற்றமுள்ள போக்கை நாம் காணமுடிகிறது. நம் வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கும் சுதந்திரம் நமக்கு உள்ளது. ஆனால் அடுத்தவர்கள் எண்ணங்களும், கொள்கைகளும், வாழ்க்கை முறைகளும் நம்முடையதைப் போலவே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது கிட்டத் தட்ட அவர்களை அடிமைப்படுத்த நினைக்கும் முனைப்பே. நம் வழி உண்மையாகவே சிறந்ததாகவே உள்ளது என்று வைத்துக் கொண்டாலும் அதை அடுத்தவரிடம் பலவந்தமாகத் திணிக்க முடியாது. அப்படித் திணிப்பது வெற்றியையும் தராது. நம்முடைய நகலாக உலகம் இருக்க முடியாது, இருக்கவும் தேவையில்லை என்று உணர்வது மிக முக்கியம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் தாக்குப்பிடித்து வந்துள்ள இந்தத் தவறுகள் நம்மிடம் இருக்கிறதா என்று நேர்மையுடன் சோதித்துப் பார்ப்பது நல்லது. இருந்தால் அவற்றை நம்மிடம் இருந்து நீக்கிப் பயனடைந்து மற்றவர்களும் அப்படி நீக்கிக் கொள்ள விரும்பும்படி நல்ல முன் உதாரணமாக வாழ்ந்தால் அது வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

" இசைத் தூண்கள் " - உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை?





உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !


இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்திமூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது .

அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது .

இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைக்கற்றையை " உருவாக்குகின்றது . எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது?

இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள " இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. "In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது. " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது. சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ?

நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல். இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை. ஆனால், இந்தத் தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை.

இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது. அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது. ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள், இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள். இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம்.

தேடல் தொடரும்...

படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசை தூண். ஆனால் இதை போன்ற இசை தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

பெண்களின் பெருமைகள்!




1. ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

2. புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 1431

 3. கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தது மே 12, 1820

 4. இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.

5. உலகின் முதல் விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை வெற்றிகரமாக வலம் வந்தவர்.

6. இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம் கியுரி சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல கஷ்டங்களுக் கிடையே துவக்கினார்.

7. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் ஆரதி சாகா.

8. ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய ஒரே ஆசிய வீராங்கனை அனிதா சூட். 81/4 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.

9. இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள் ஜூலை19,1993ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

10. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.

11. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

12. உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.

13. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் திருமதி பாத்திமா பீவி.

14. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.

15. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியுசிலாந்து.

16. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அண்ணா சாண்டி.

17. இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெண்மணி சானியாமிர்ஸா.

18. மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்மணி மார்டினா ஹிங்கிஸ்.

19. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தி

20. இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி

21. இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.

22. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் சகுந்தலா தேவி.

23. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாசாவ்லா

24. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் மீரா குமார்.

25. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுஜேதா கிருபாளினி.

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது...? குட்டிக்கதைகள்!




ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.

பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.

குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

 ''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.

 ''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.