Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 23 October 2013

குழந்தை மலச்சிக்கலை போக்கும் கைவைத்தியம்!

குழந்தைகள் ஆரோக்யமில்லாத உணவுப் பொருட்களின் மீது ஆசைப்படுகின்றனர். அதனை பெற்றோர்களும் வாங்கிக் கொடுப்பதால் அவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி, போதிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் இல்லாவிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.


இவ்வாறு மலச்சிக்கல் ஏற்படும் போது குழந்தைகள் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் பிரச்சனையை புரிந்து கொண்டு அவர்களை அந்த மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து மீட்க வேண்டும்.


மேலும் இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை வைத்தியங்கள் உள்ளன.


தற்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும் சில கைவைத்தியங்கள் உள்ளன. அந்த கைவைத்தியங்களை படித்து உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் அதன் படி செய்து பாருங்கள்.


தேன்


ஒரு டம்ளர் பாலில் 1-2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு கொடுத்தால் மலச்சிக்கல் குணமாகும்.


நார்ச்சத்துள்ள உணவுகள்


நார்ச்சத்து அதிகம் இருப்பதால் காய்கறிகள் மலச்சிக்கலை சரிசெய்யும் குணம் கொண்டவை. குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருக்கும்.


ஆகவே முட்டைக்கோஸ், பீட்ரூட், பூசணிக்காய், பசலைக் கீரை, கேரட் போன்றவற்றை குழந்தைகளின் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதோடு மலச்சிக்கல் இருந்தால் அது சரியாகிவிடும்.


ஆளிவிதை


குழந்தைகளுக்கு உள்ள மலச்சிக்கலை ஆளிவிதை சரிசெய்துவிடும். அதற்கு ஆளிவிதையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.


விளக்கெண்ணெய்


பெரிய குழந்தையாக இருந்தால், அவர்களுக்கு ஒரு டம்ளர் பாலில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து குடிக்க கொத்தால் மலச்சிக்கல் உடனே குணமாகும்.


தண்ணீர்


சில சமயங்களில் குழந்தைகளுக்கு உடல் வறட்சி இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே அத்தகைய குழந்தைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும்.


வாழைப்பழம்


குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலும் ஒரு சிறந்த நிவாரணியாக இருப்பது தான் வாழைப்பழம். அதிலும் வாழைப்பழத்தை, ஒரு டம்ளர் சூடான பாலுடன் கொடுக்க வேண்டும்.


ஓமம்


ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 ஸ்பூன் ஓமம் மற்றும் சர்க்கரை கலந்து மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் இந்த பிரச்சனை உடனே குணமாகும்.

கூகுள் பிளே ஸ்டோர் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம்!

அன்ரோயிட் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்கள் உட்பட கூகுள் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் சாதனங்களை கொள்வனவு செய்தவற்கு கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தப்படுகின்றது.
தற்போது இத்தளத்திற்கான புதிய பதிப்பில் உருவான Google Play Store 4.4 அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த அப்பிளிக்கேஷன் ஆனது அடுத்தவாரம் அறிமுகப்படுத்தப்படவுள்ள Google Nexus 5 சாதனத்தில் உத்தியோக பூர்வமாக நிறுவப்பட்டு வெளியிடப்படவுள்ளது.


யூகலிப்டஸ் இலையில் தங்கம்

 


 யூகலிப்டஸ் மரத்தின் இலையில் தங்கத் துகள் படிந்திருப்பதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கல்கூர்லி என்ற பகுதி தாது வளம் நிறைந்த பகுதி. இங்கு தங்கம் அதிக அளவில் இருப்பதாக 1800ம் ஆண்டுகளிலே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். மண் வளத்துக்கும், அங்குள்ள தாவரங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து இவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

கல்கூர்லி பகுதியில் உள்ள யூகலிப்டஸ் மரத்தின் இலைகளை அதிநவீன எக்ஸரே கருவி மூலம் படம் பிடித்து பார்த்தபோது, அதில் மிக நுண்ணிய அளவில், அதாவது தலைமுடியின் அகலத்தில் 5ல் 1 பங்கு அளவுக்கு தங்க துகள் படிந்திருந்ததை கண்டு பிடித்தனர். இது குறித்து புவிவேதியியல் நிபுணர் மெல் லிண்டர்ன் கூறுகையில், ‘‘யூகலிப்டஸ் மரத்தின் வேர்கள் தரையில் 100 அடி ஆழம் வரை ஊடுருவி தங்கத் துகள் அடங்கிய நீரை உறிஞ்சுகின்றன. தங்கத் துகள் இலைகள் மற்றும் பக்க கிளைகளுக்கு கடத்தப்படுகின்றன. அவை பின்னர் காய்ந்து உதிர்ந்து விடுவதால், மரத்துக்கு பாதிப்பில்லை’’ என்றார்.

இந்த ஆராய்ச்சி கட்டுரை ‘நேச்சர் கம்யூனிகேஷன்’ என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டு ள்ளது. இதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள தாது வளங்களை தோண்டி பார்க்காமலேயே, அங்குள்ள தாவரங்களின் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் பொதிந்துள்ள தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற வளங்க ளையும் இதே முறையில் அங்குள்ள தாவரங்களை ஆராய்வதின் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். யூகலிப்டஸ் தங்கம் காய்க்கும் மரங்களா என்று ஆஸி. விஞ்ஞானிகளிடம் கேட்டால், 500 மரங்களை அழித்தால்தான், சிறிய மோதிரம் செய்யும் அளவுக்கு தங்கம் கிடைக்கும் என்கின்றனர்.

எக்ஸ்ட்ரா தகவல்

பூமியிலிருந்து இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரம் டன் தங்கம் எடுக்கப்பட்டுள்ளதாம். உலக தங்க கவுன்சில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

காதலில் ஆறு வகை..!!

'Romantic' without inikkatu youth. With love, 'he and she' to see how many meanings parvaiyiltan


‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனும், அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை? கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது, குட்டிக்கரணம் அடிப்பது, கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக் கொள்வது, சோகமாக இருக்கும் அவன் முகம் அவளைக் கண்டதும் மலர்ந்துவிடுவது என எத்தனை `ரொமான்டிக்’ காட்சிகள் ஒவ்வொரு இளைஞனின் வாழ்விலும். அப்படி, நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் `ரொமான்டிக்’ செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எத்தகையது என்பதை விவரிக்கிறார்கள் இங்கே…

மன்மதன் காதல்

காதல் பாடல் பாடிக் கொண்டிருக்கிறீர்களா? அதிலும் உணர்ச்சி ஊட்டும் வரிகளை அழுத்தமாக உங்கள் உதடுகள் உச்சரிக்கிறதா? அப்படியெனில் உங்களுக்கு காதல் உணர்வுகள் அதிகம். காதல்வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம்.

உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இந்த வகை ரொமான்டிக்கை ஆய்வாளர்கள் `மன்மதன் காதல்’ என்கிறார்கள். இந்த வகையில் உள்ள ஒரே ஒரு குறைபாடு காதலர் இருவரில் ஒருவரது ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனாலும் உங்களுக்குள் நல்ல புரிதலும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தலும் நிகழும். இப்படி தீவிர காதலுணர்வு கொண்ட காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.

கவன ஈர்ப்பு காதல்

நீங்கள் காதலிக்கும் பெண்ணை தினமும் பார்க்கிறீர்கள். ஓரளவுதான் பழக்கம். ஆனால் நெருக்கமில்லை. மற்றவர்களோடு கூட்டத்தோடு கூட்டமாக மட்டுமே சந்திக்க முடிகிறது. அப்போது அவளை கவருவதற்காக, அவள் விரும்பும்படியாக அல்லது அவள் கேட்கும் படியாக பாடுவது, பேசுவது என்று கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறீர்களா? உங்கள் பேச்சை அவளும் ரசித்து புன்னகைக்கிறாள். ஆனால் பதில் எதுவும் சொல்வதில்லை. இப்படி இருக்கிறதா? உங்கள் நிலைமை.

ஆராய்ச்சியாளர்கள் இதனை`கவனஈர்ப்பு காதல்`என்கிறார்கள். இது முழுமையான காதல் அல்ல. உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது. நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள். அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அவள் மீது அன்பு, அக்கறை, மரியாதை எல்லாமே இருக்கிறது. இளமையின் குறுகுறுப்பு இல்லாத பார்வையே பார்க்கிறீர்கள். பேசவும் செய்கிறீர்கள். அதில் உள்ளர்த்தமோ, ரகசியமோ எதுவுமில்லை. அவளும் அப்படியே பழகுகிறாள். `இது எந்த வகை காதல்?’ என்றுதானே கேட்கிறீர்கள்.

சேமிப்பு காதல்

இப்படிப்பட்ட காதலை, ஆய்வாளர்கள் `சேமிப்பு காதல்’ என்று வகைப்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. இருவரும் ஆழமான அன்பு வைத்திருப்பார்கள். காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள்.

`காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்கவேண்டும்’ என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள். நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.

திட்டக்காதல்

`உங்களை பிடித்திருக்கிறது’ என்று உங்கள் காதலி சொல்லிவிட்டாள். உங்களுக்கும் அவளைப் பிடித்திருக்கிறது. நன்றாகவே பேசிக் கொள்கிறீர்கள். ஆனால் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் எல்லை மீறல் இல்லவே இல்லை. காமத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள் ஆனால் விரசம் இல்லை. பிரச்சினையைப் பற்றி பேசுகிறீர்கள், உங்கள் குறையை அவளும், அவளது குறையை நீங்களும் சுட்டிக்காட்டி பேசிக் கொள்கிறீர்கள், முரண்பாடு ஏற்பட்டாலும் முட்டிக் கொள்வதில்லை…!

உங்கள் காதல் இந்த நிலையில் இருக்கிறதா?

இது `திட்டக் காதல்’.வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.

இனிப்பு காதல்

அடிக்கடி தீண்டிக் கொண்டும், சீண்டிக் கொண்டும் இருப்பார்கள் சில காதலர்கள். பெரும்பாலும் சீண்டல்கள் எல்லைமீறும். இருந்தாலும் ஒருவரை ஒருவர் தடுப்பதில்லை. அந்த சீண்டலை அனுமதிக்கிறீர்கள்.

இப்படிப்பட்ட காதலராக நீங்கள் இருந்தால்?

இதனை `இனிப்பு காதல்’என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும். அதிக உணர்ச்சி கொண்டவராகவும், கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள்.

இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார். இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

வெற்றிக்காதல்


காதலி போனில் பேசும்போது லேசாக இருமும் சத்தம் கேட்டால் போதும் உடனே ஆபீசுக்கு விடுமுறை எடுத்துவிட்டு காதலியை நேரில் பார்க்க கிளம்பிவிடுகிறீர்களா? அவள் விளையாட்டுக்காக `உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது வருவாயா?’ என்றால் என்ன வேலையிருந்தாலும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அவளிடம் போய் ஆஜராகி விடுகிறீர்களா? இதுபோன்ற ஆழ்ந்த காதலை அவளும் உங்களிடம் வைத்திருக்கிறாளா?

உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இதனை `வெற்றிக் காதல்’ என்கிறார்கள், ஆய்வாளர்கள். இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள்.

சரி.. இதில் உங்கள் காதல் (காதலி) எந்த வகை என்று நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதும்..!!!!

பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்….

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், “Good touch”, “bad touch” எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். “All work and no play makes Jack a dull boy”

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் “ச்சீ வாயை மூடு” “தொணதொண என்று கேள்வி கேட்காதே” என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

மூக்கு குத்துவது..!

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு.

கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

ஆண்களுக்கு 10 நிமிடத்திலேயே டயர்டாய்டும்.. அது என்ன?


ராம்ஜி - ஆண்களும் பெண்களும் இணைந்து செய்யும் வேலை அது. ஆனால், ஆண்களுக்கு பத்து நிமிடத்திலேயே சோர்வாகிப் போய் விடும். ஆனால் பெண்களுக்கு டைம் ஆக ஆகத்தான் உற்சாகம் கூடும்.. அது என்ன....?


 ராகவி - சீ .. போ.. இது கூடவா தெரியாது....! ராம்ஜி- மண்டு, மண்டு.. அது ஷாப்பிங்.. தப்புத் தப்பாவே நினைக்காதே....!

சென்டிமென்ட்+சுவாரஸ்யம் = பதேபூர் சிக்ரி!

சென்டிமென்ட்+சுவாரஸ்யம் = பதேபூர் சிக்ரி
த்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் பெருமை மிக்க நகரம் பதேபூர் சிக்ரி. இதை உருவாக்கியவர் மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர். பதேபூர் சிக்ரி 1571- 1585ம் ஆண்டு வரை மொகலாயப் பேரரசின் தலைநகரமாகவும் திகழ்ந்-துள்ளது. இதன் பின்னணி, சென்டிமென்ட் கலந்த சுவாரஸ்யம்.
 
1560ம் ஆண்டு வரை ஆக்ரா கோட்டைதான் மொகலாயப் பேரரசின் தலைநகரம். அப்போது ராஜபுத்திர இளவரசியான இந்துப்பெண் ஹர்கா பாய் என்பவரை மணந்து கொண்டார் அக்பர். ஹர்காபாய்தான் பின்னாளில் மரியம்-உல்- ஷமானி பேகம் (ஜோதாபாய் அக்பர்) ஆனார். 

அக்பர்- மரியம் உல் ஷமானி பேகம் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டும் குழந்தைப்-பருவத்திலேயே இறந்து விட்டன. சோகத்தில் இருந்த அக்பருக்கு சூஃபி ஞானி சலீம் சிஷ்டி என்பவர் ஆறுதல் கூறினார். இன்னொரு குழந்தைக்கு வாய்ப்பு உண்டு என ஆசீர்வதித்தார்.

அவர் சொன்னது போலவே அக்பர் தம்பதிக்கு இன்னொரு குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியிடைந்த அக்பர் அந்த ஞானியின் நினைவாக குழந்தைக்கு நூருதீன் சலீம் ஜஹாங்கீர் என பெயரிட்டார். அந்தக்குழந்தைதான் பின்னாளில் ஜஹாங்கீர் சக்கரவர்த்தி ஆனது.

மேலும் ஞானி சலீமை கவுரவப்படுத்தும் வகையில் சலீம் வசித்து வந்த பதேபூரில், அரண்மனையையும் நகரையும் உருவாக்கினார் அக்பர். புதிய கட்டடங்கள் கலைநயத்துடன் எழுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து மொகலாயப் பேரரசின் தலைநகரையும் பதேபூர் சிக்ரிக்கு மாற்றினார் அக்பர். அக்பரின் அமைச்சரவையில் நவரத்னங்களாகப் போற்றப்பட்ட பீர்பால் உள்ளிட்ட ஒன்பது அமைச்சர்களின் ராஜாங்கமும் இங்குதான் நடந்துள்ளது.

இவற்றையெல்லாம் நினைவு கூறும் வகையில்தான் அழகும், கலைத்திறனும் கூடிய கட்டடங்கள் இன்றளவும் பதேபூர் சிக்ரியில் பளபளத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பொதுமக்களை மன்னர் சந்திக்கும் திவான்-ஐ-ஆம் ஹால், பிரதிநிதிகளை சந்திக்கும் திவான்-ஐ- காஸ் ஹால், பீர்பால் ஹவுஸ், மரியம் உல் ஷமானி (ஜோதா அக்பர்) அரண்மனை, ஐந்தடுக்கு மாளிகையான பஞ்ச் மஹால், ஜும்மா மஸ்ஜித், டாம்ப் ஆப் சலீம் சிஷ்டி, புலந்த் தர்வாஸா போன்ற கட்டடங்கள் முக்கியமானவை. பதேபூர் சிக்ரியை 1986ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.
 
எப்படிப் போகலாம்?
 
ஆக்ராவில் இருந்து சுமார் 40கி.மீ தொலைவில் பதேபூர் சிக்ரி நகரம் உள்ளது. சாலை மார்க்கமாவும் செல்லலாம். ஆக்ராவில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆக்ராவில் இருந்து ரயிலிலும் போகலாம். ஆக்ராவில் விமான நிலையம் உள்ளது.

'விட்டுக் கொடுக்கும் தன்மை' (நீதிக்கதை)



ஒரு காட்டின் நடுவில் ஒரு நதி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.
 

ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு செல்ல நதியின் மேல் ஒரு குறுகிய பாலம் மட்டுமே இருந்தது.ஒருவர் போனால் ஒருவர் எதிரே வரமுடியாது அந்த அளவு குறுகிய பாலம்.
 

காட்டில் இருந்த விலங்குகள் இந்த பாலத்தைக் கடந்தே நதியைக் கடந்தன.
 

ஒரு நாள் இரண்டு நரிகள்.ஒவ்வொன்றும் வேறு வேறு முனையில் இருந்து நதியைக் கடக்க வந்தன.
 

ஒரு கட்டத்தில் இரண்டும் எதிர் எதிரே நின்று மற்றதை வழி விடச் சொன்னது.
மற்ற நரிக்கு ஒரு நரி வழி விடவேண்டுமென்றால் திரும்பி கிளம்பிய முனைக்கேச் செல்லவேண்டும்.
 

ஆதலால்...இரண்டு நரிகளும் அதற்கு இணங்காமல் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் போட்டி இட்டு...சண்டை செய்து ...நதியில் விழுந்து மடிந்தன.
 

இவற்றை அடுத்தடுத்த முனைகளில் இருந்த ஆடுகள் பார்த்தன.
 

ஆதலால்....ஒரு ஆடு குரல் கொடுத்து மற்ற முனையிலிருந்த ஆட்டை முதலில் கடந்து வரச்செய்தது.பின்னர் குரல் கொடுத்த ஆடு அடுத்த முனைக்கு கடந்து சென்றது.
 

ஒற்றுமை,விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாததால் நரிகள் உயிர்விட்டன....ஆனால் அந்த தன்மைகள் இருந்ததால் ஆடுகள் உயிர் பிழைத்தன.

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-01

என்னுடைய கடந்த பதிவான பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை பதிவு எழுதிகொண்டிருக்கும் போது பழங்கால இந்திய வரைபடங்கள் பற்றி நான் தேடிய ஒரு தொகுப்பை இந்தியாவின் வரலாற்றுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இப்பதிவை ஆரம்பிக்கிறேன். இனி பயணத்தை தொடர்வோம்.



 


                  இந்தியாவின் வரலாற்றை பார்ப்பதற்கு முன்பு உலகில் இந்தியாவின் அமைவிடம் மற்றும் இந்தியாவில் முதல் மனிதனின் தோற்றம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு பின்னர் இந்திய வரலாற்றுக்கு வருவோம்




 


                    
பிரபஞ்ச வெளியின் வரலாற்றில் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனோ, நாம் வாழும் பூமி என்ற சிறிய கோளோ கிடையாது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முன்பு அகண்ட வெளியில் சுற்றி திரிந்த தூசுகளும், கொதித்து கொண்டிருந்த கற்களும் ஒன்று சேர்ந்து ஒரு நெருப்புகோலமாக ஒன்று திரண்டது பின்னர் பல லட்சம் ஆண்டுகளை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல குளிர்ந்து ஒரு திடமான உருண்டையாக உருப்பெற்றது. 




 


பின்னர் சூரிய மண்டலத்தின் தலைவரான சூரியனை சுற்றி வளம் வர ஆரம்பித்தது. பெயரில்லாத அக்கிரகத்தில் அப்போது கடுகளவு உயிரினம் கூட  கிடையாது. சுமார் நூறுகோடி ஆண்டுகளுக்கு பிறகு கடல்கள் உருவாகின.  அநேகமாக 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ ஒரு விசித்திரம் நிகழ்ந்ததில் கடலுக்கடியில் பாக்டீரியாக்கள் உருவாயின கூடவே செடிகள் வளர ஆரம்பித்தன.




 



 உலகில் உயிரனங்கள் வளர வழிவகுத்தது இந்த செடி கொடிகளே. ஆக்சிஜன் இல்லையேல் பூமியில் உயிரினங்கள் இல்லை.  


உலகில் முதன்முதலில் தோண்றிய உருப்படியான உயிரினம் மீன் வகைகளே. இவை தோன்றியது 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு. 




 


பின் பாம்பு, பல் போன்ற ஊர்வன தோன்றின  பின்பு அவை படிப்படியாக  வளர்ந்து டைனோசர்களாக  உருப்பெற்றன  85 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி 6 கோடி ஆண்டு வரை பூமியில் நடைபெற்றது டைனோசர் போன்ற ஊர்வன உயிர்னங்களின் ஆட்சியே. டைனோசர்கள் பார்ப்பதற்கு ஒரு செல் போன் டவர் அளவு உயரம் இருந்தாலும் அவை போட்டது முட்டைகளே.  பின்பு  குட்டி போடு பால் கொடுக்கும் எலி போன்ற உயிரினங்கள் தோன்றின. குட்டி போடு பால் கொடுப்பது என்பது ஒரு ஆச்சரியமான பரிணாம வளர்ச்சியே. 




 


mammals என்றழைக்கபடும் இந்த பாலூட்டிகளின் ஆட்சி சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது இதில் ஒரு உயிரினம் தான் மனிதன். பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சியில் குரங்குகளை போல பல விதமான மனிதர்களும் தோன்றினர். அதில் modern man என்றழைக்கபடும் நாம் தோன்றியது 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான். 




 


homo sapien என்றழைக்கபடும்  நாம் முதலில்  தோன்றியது africa காடுகளில் தான். அதுவும் முதலில் தோன்றியது ஒரு ஆண் அல்ல பெண் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.அதுவும் ஐரோபிய வாழ் வெள்ளைகார பெண் அல்ல africa கருப்பு நிற பெண். ஆகவே விஞ்ஞான அடிப்படையில் பார்த்தாலும் சக்தி இல்லையேல் சிவம் இல்லை. 


                    ஆரம்பத்தில் பல விதமான மனித வகையினர் உலகில் நடமாடினர் காலப்போக்கில் அவை அழிந்து மிச்சம் இருந்தது இரண்டு வகையினரே..


     1. நாம் (kuromeknan)


      2. நியாண்டர்தால்(neandertal) மனிதன் 



 


ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனும், நியாண்டர்தால் மனிதனும் சமமாக காடுகளில் வாழ்ந்து வந்தனர். CRO-MAGNON என்றழைக்கபடும் நாம் பல்கி பெருகியவுடன் நியாண்டர்தால் மனித இனம் அழிய தொடங்கியது. 


சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் இனம் அழிந்தது இதற்கான உண்மை காரணம் தெளிவாக அறிவியலாளர்களால் கூறஇயலவில்லை. நியாண்டர்தால் மனிதனும் நம்மை போலவே உருவ ஒற்றுமையும் சற்று குறைவான புத்தி கூர்மையும்  படைத்திருந்தனர்.




 


           africa காடுகளில் விலங்குகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொண்டு ஒரு பயத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து வந்த மனிதன் கும்பல் கும்பலாக வாழ்வதற்கு ஏற்ற இடத்தை தேடி பயணிக்க ஆரம்பித்தனர் இப்பயணத்தில் நியாண்டர்தால் இனமக்களும் இருந்தனர். வழியில் பல புதிய பழங்கள் இல்லை தலைகளை சாப்பிட வேண்டியிருந்தது. சிலவற்றை சாபிட்டு இறந்தவர்களை பார்த்து மற்றவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற எச்சரிக்கை உணர்வை பெற்றனர். வழியில் வசதியான இடம் வந்தவுடன் ஒரு சிலர் அங்கேயே தங்கினர் மற்றவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். 


 



மனிதன் செல்லும் இடம் எங்கும் அவனை கடல் வலி மறிக்கவில்லை.  இது சற்று விசித்தரமாக தோணலாம். இதை பற்றி முழுமையாக அறிய நாம் ஆதி காலத்தில் உலகம் எப்படி இருந்தது என்பதை பற்றி முதலில் அறியவேண்டும். ஆதி காலத்தில் இருந்த உலகத்திற்கு அறிவியலாளர்கள் இட்ட பெயர் கொண்டவான லேன்ட்(gondwana land). இந்த கொண்டவான லேன்ட் என்பது என்ன? மனிதனின் அடுத்தக்கட்ட பயணம் எங்கே? என்பதை பற்றி அடுத்த தொடரில் விரிவாக பார்ப்போம்.   

நோக்கியா Lumia 1520 முக்கிய அம்சங்கள்!


நோக்கியா Lumia 1520, 6 இன்ச் முழு HD (1080x1920) LCD டிஸ்ப்ளே உடன் வருகிறது. டூயல் LED ஃபிளாஷ் உடன் 20-மெகாபிக்சல் PureView கேமரா கொண்டுள்ளது. Lumia 1520 ஹாங்காங், சிங்கப்பூர், அமெரிக்க மற்றும் Q4 2013 ஐரோப்பிய சந்தைகளில் முதலில் கிடைக்கும் என்றும், இந்த ஆண்டுக்கு பின்னர் மற்ற சந்தைகளில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்பார்த்தபடி, Lumia 1520 அம்சங்கள் மூன்றாவது விண்டோஸ் தொலைபேசி மேம்படுத்தல் கொண்டு புதிய வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன் 8 ஆம்பர் மேம்படுத்தலில் இயங்குகிறது. மேலும் Quad-core 2.2GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 ப்ராசசர், மற்றும் 2GB ரேம் கொண்டுள்ளது. built-in வயர்லெஸ் சார்ஜ் ஃபன்ஷனாலிட்டி கொண்ட 3400mAh பேட்டரி கொண்டுள்ளது. Lumia 1520 முன் எதிர்கொள்ளும் 2 மெகாபிக்சல் HD கேமரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசி மூன்று வண்ணங்களில் கருப்பு, சிவப்பு வெள்ளை மற்றும் மஞ்சள் வரும். நோக்கியா Lumia 1520 கருப்பு வண்ண வகை மறுசுழற்சி பொருட்களை கொண்டு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புதிய Lumia 1520 மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் மற்றும் 7GB கொண்ட Skydrive cloud சேமிப்பு இடம் ஏற்றப்பட்டு வருகிறது. 32 மற்றும் 64GB சேமிப்பு விருப்பங்கள், மற்றும் NFC உடன் வருகிறது.

நோக்கியா Lumia 1520 முக்கிய குறிப்புகள்

6 இன்ச் முழு HD (1080x1920) LCD டிஸ்ப்ளே


Quad-core 2.2GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 

ப்ராசசர்

ரேம் 2GB


20-மெகாபிக்சல் PureView கேமரா


விண்டோஸ் போன் 8


NFC 


3400mAh பேட்டரி

நோக்கியாவின் Lumia 2520 டேப்லெட் அம்சங்கள்!



நோக்கியா நிறுவனம் Lumia 2520 என்ற புதிய டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. Lumia 2520, 10.1-இன்ச் முழு HD திரை மற்றும் 6.7 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. இது $ 499 விலையில் வருகிறது மேலும், டேப்லெட் 3G இணைப்புடன் வருகிறது.


Lumia 2520 பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவில் முதலில் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் வெளியிடுவதைப் பற்றி எந்த வார்த்தையும் இல்லை. இந்த டேப்லெட் இப்போது விண்டோஸ் RT  மற்றும் விண்டோஸ் 8 இயங்குகிறது.



Lumia 2520 டேப்லெட் முக்கிய அம்சங்கள் ஆகும்:



1920 x 1080 தீர்மானம், 10.1-இன்ச் முழு HD திரை கொண்டுள்ளது.


பிக்சல் அடர்த்தி 281 ppi உள்ளது.


6.7 மெகாபிக்சல் பின்புற கேமரா


2 மெகாபிக்சல் முன் கேமரா


குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 Quad-core 2.2 GHz ப்ராசசர்,


2 ஜிபி ரேம்,


அதிகபட்சமாக 25 நாட்கள் காத்திருப்பு நேரம் உள்ளது


MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடியது,


USB 3.0 ஸ்லாட்,


ப்ளூடூத் 4.0,


WiFi


பகிர்வுக்காக NFC.


4G இணைப்பு


2 USB போர்ட்கள்.


விண்டோஸ் RT  மற்றும் விண்டோஸ் 8 இயங்குகிறது.