Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 14 December 2013

காயத்ரி மந்த்ரம் ...




காயத்ரி என்றால்,எவரெல்லாம் தன்னைக் கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரஷிப்பது என்பது அர்த்தம் ..
காயந்தம் த்ராயதே யஷ்மத் காயத்ரி (இ) த்யபிதீயதே

கானம் பண்ணுவதென்றால் இங்கே பாடுவது என்று அர்த்தம் இல்லை
யார் தன்னை பிரேமையுடனும் பக்தியுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரி மந்த்ரம் ரஷிக்கும் .



ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத்

என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது.


இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். என்று அழைக்கிறார்கள்.


இனி ஓதும் முறையைப் பார்ப்போமா? முதலில் உடல் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு தூய இடமொன்றில் நின்றபடியோ அல்லது சப்பாணியிட்டோ அமர்ந்து ஓத வேண்டும்.


தொடங்கும் முன் ஓம்…….ஓம்………ஓம்…… என பிரணவ மந்திரத்தை 3 தரம் சொல்லித் தொடங்க வேண்டும்.
பின் மந்திரத்தை கீழ் சொன்னது போன்று கூற வேண்டும்.


மூச்சை உள்ளெடுத்துக் கொண்டு
ஓம் பூர் புவ: ஸுவ என்ற வரியை சொல்ல வேண்டும்.


பின் மூச்சை தம் கட்டிக் கொண்டு
தத் ஸவிதுர் வரேண்யம் என்ற வரியை சொல்ல வேண்டும்.


பின் மூச்சை வெளிவிட்டபடி
பர்கோ தேவஸ்ய தீமஹி என்ற வரியை சொல்ல வேண்டும்


இறுதியாக சுவாசத்தை நிறுத்தி
தியோ யோன: ப்ரசோதயாத் என்ற வரியை சொல்ல வேண்டும்.

இப்படி 108 தரம் சொல்ல வேண்டும். முடிக்கையிலும் பிரணவ மந்திரம் சொல்லித்தான் முடிக்கணும்.

மன ஒருமைப்பாட்டிற்கு எளிய பயிற்சி!












சிவப்பு நிற புள்ளியை கவனமாக பாருங்கள்.


அதையே உற்று பாருங்கள்.


உங்களுடைய எண்ணங்களை சிதறடிக்க வேண்டாம்.


இப்போது நீல நிறமாக வட்டம் மறைந்து விடும்.


மீண்டும் உங்கள் கவனம் சிதறும் போது நீல நிற வட்டம் தோன்றும்.






 Look at the red dot carefully. 

Just keep looking at it. 

Concentrate and don't think about your crush/love. 


The blue circle will gradually disappear. 


And once you loose focus, the blue circle will start re-appearing

இசையில் சர்வதேசத்தையும் அதிர வைக்கும் மானாமதுரை கடம்!




இசையால் வசமானவர்கள், அதை மீட்டும் கலைஞரைப் பாராட்டுவார்கள். இசையை இழையோடவிட்ட இசைக் கருவியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஆனால் முதல்முறை யாக, இசைக்கருவி தயாரிக்கும் கலைஞர் ஒருவருக்கு விருது அறிவித்து கவுரவித்திருக்கிறது மத்திய அரசு.

மத்திய மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சங்கீத நாடக அகடமி, 60 ஆண்டுகளை கண்ட அமைப்பு. ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்க ளுக்கு புரஸ்கார் விருதுகளை வழங்கி கவுரவித்து வரும் இந்த அமைப்பு, முதல்முறையாக இந்த ஆண்டு, கடம் தயாரிக்கும் கலைஞரான மானா மதுரை மீனாட்சி அம்மாளுக்கு புரஸ்கார் விருதை அறிவித்திருக்கிறது.

கலக்கும் கடம் 

மண்பாண்டத் தொழிலுக்கு பேர் போன மானாமதுரையில் கடம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரே குடும்பம் மீனாட்சி அம்மாளின் குடும்பம் தான். சுமார் 150 ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகிறார்கள். இவர்களின் கைப்பக்குவத்தில் உரு வான ‘கடம்’கள் இந்தியாவில் மட்டு மின்றி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அமெரிக்கா, லண்டன், இலங்கை, ஜப்பான், மலேசியா என சர்வதேச இசைக் கலைஞர்களின் கைகளிலும் கிடுகிடுத்துக் கொண்டிருக்கிறது.

‘‘எங்களுக்கு இந்த விருது கிடைச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இசைக்கருவி தயாரிக் கிறவங்களுக்கு விருது குடுத்திருப்பது இதுபோன்ற தொழிலில் இருக்கறவங் களை ஊக்கப்படுத்தும்’’ என்று தங்களின் மகிழ்ச்சியை ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண்டார் மீனாட்சி அம்மாளின் மகன் ரமேஷ்.

“எங்க பாட்டனார் உலகநாத வேளார், தாத்தா வெள்ளைச்சாமி வேளார், அப்பா கேசவன் வேளார்.. அவங்களுக்கு அப்புறம் நானும் எங்கம்மாவும் இப்ப இந்தத் தொழிலை செஞ்சுட்டு வர்றோம். எங்க முன்னோர் கள் இசையிலும் நாடகத்திலும் நாட்டம் உள்ளவங்க. அதனால்தான் எங்களுக்கும் அந்த ஞானம் கொஞ்சம் தொத்திக்கிச்சு.

மூவாயிரம் தடவை தட்டணும் 

கடம் செய்யுறது அவ்வளவு சுலபமான வேலை இல்லைங்க. தட்டுனா ஸ்ருதி சுத்தமா வரணும். இதுக்காக கிராபைட், ஈய செந்தூரம் மாதிரியான பவுடர் களைப் போட்டு மண்ணைப் பக்குவப் படுத்தணும். ஒரு தடவ தட்டுனா சுமாரா 15, 20 நொடிகளாச்சும் அதிர்வு இருக் கணும். அப்படி இருந்தாத்தான் ஸ்ருதி சுத்தமா இருக்கும். அந்தளவுக்கு வரணும்னா, கொறைஞ்சது மூவாயிரம் தடவையாச்சும் மரப் பலகையால தட்டித் தட்டி கடத்தை உருவாக்கணும்.

மண்பாண்டம் செய்யுறது எங்க ளுக்கு குலத்தொழில். அப்பப்ப இடை யிலதான் கடம் செய்யுறோம். மூணு நாள் மெனக்கெட்டோம்னா இருபது கடம் வரைக்கும் செஞ்சு முடிச்சிரு வோம். அந்த இருபதும் சேல்ஸ் ஆன பின்னாடித்தான் அடுத்ததா கடம் செய் வோம். பெங்களூரில் இருக்கிற உ.வே. சாமிநாத அய்யரின் பேத்தி சுகன்யா ராம்கோபால்தான் முதல் பெண் கடம் வித்வான். ஜலதரங்கம் மாதிரி இப்ப அவங்க கடதரங்கம் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க வாசிக்கிற கடம் அத்தனையுமே எங்க தயாரிப்புத்தான்.

டிரம்ஸ் சிவமணிக்கு… 

பிரபல இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, வெளிநாட்டுக்கு போயிருந் தப்ப உதூ, உத்தாங்கோ என்ற ரெண்டு இசைக் கருவிகளை வாங்கிட்டு வந்திருக்காரு. ஃபைபர்ல செஞ்சிருந்த அந்தக் கருவிகள் எப்படியோ உடைஞ்சி போச்சு. ‘இதே மாதிரி களிமண்ல செஞ்சுத் தரமுடியுமா?’ன்னு கேட்டாரு. பத்து பீஸ் செஞ்சுக் குடுத்தேன். அதை வெச்சு இப்பப் பட்டையை கெளப்பிக் கிட்டு இருக்காரு…” என்றார் ரமேஷ்.

புரஸ்கார் விருதுடன் ஒரு லட்சத்துக் கான பணமுடிப்பும் பாராட்டுப் பொன் னாடையும் மீனாட்சி அம்மாளுக்கு வழங்கப்படுகிறது. விருது கிடைத் திருப்பது குறித்து கேட்டபோது, ‘‘எங்க மாமனார், வீட்டுக்காரர் இவங்கெல் லாம் சொல்லிக் குடுத்துட்டுப் போன தைத்தான் நாங்க செஞ்சுட்டு இருக் கோம். அவங்களுக்கு கிடைக்காத பெருமை எனக்குக் கிடைச்சிருக்கு. மொத்தத்துல சந்தோஷம்யா’’ என்று சிரித்தார் மீனாட்சி அம்மாள்.

‘‘உங்களுக்குப் பின்னாடி உங்கள் வாரிசுகள் கடம் பண்ணுவார்களா?’’ என்று ரமேஷிடம் கேட்டபோது, ‘‘குலத் தொழில் என்பதால் எங்க குடும்பத்துல வர்ற எல்லாரும் கட்டாயம் மண்பாண் டம் செய்வாங்க. என்னோட மகளுக் கும் மண்பாண்டத் தொழில் தெரியும். கடம் செய்யுறதுக்கு என்னோட தங்கச்சி மகன் ஹரிஹரனை தயார்படுத் திட்டு இருக்கேன். அதுக்காகவே அவன் சங்கீதம் படிச்சிட்டு இருக்கான்’’ என உற்சாகமாகச் சொன்னார்.

ஜி மெயில் தரும் வசதிகள்...!




நாம் தினசரி பயன்படுத்தும் மெயிலான ஜி மெயிலுக்கு பேக் அப் தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது.


நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம். குறிப்பாக, சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் பல, தங்களின் ஆண்டு கணக்குகளை, கோப்புகளாக சேமித்து வைத்துள்ளன. எனவே, இலவசமாக இயங்கும் இந்த ஜிமெயில் சேவை என்றாவது மூடப்பட்டால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நிலை திக்கற்றதாகிவிடும். எனவே தான் மற்ற மின்னஞ்சல் நிறுவனங்களின் அஞ்சல்களுக்கு பேக் அப் எடுப்பது போல, ஜிமெயில் தளத்தில் உள்ள அஞ்சல்களையும், அதன் கோப்புகளுடன் பேக் அப் எடுத்து வைப்பது நல்லது. இதற்கான பயன்பாட்டு புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. ஜிமெயில் பேக் அப் என்னும் இந்த gmailbackup0.107.exe புரோகிராமினை http://www.gmail-backup.com/download  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடலாம்.


இன்ஸ்டால் செய்தவுடன், Backup என்பதில் கிளிக் செய்தால், நாம் நம் கம்ப்யூட்டரில், எந்த போல்டரைக் குறிப்பிட்டோமோ, அந்த போல்டரில், மெயில்கள் மற்றும் கோப்புகள் அனைத்தும் பேக் அப் செய்யப்படும்.


அனைத்து மெயில்களும் தேவை இல்லை எனில், குறிப்பிட்ட நாட்களுக்கிடையே கையாளப்பட்ட மெயில்களை மட்டும் பேக் அப் செய்திடலாம். பேக் அப் செய்திட்ட மெயில்கள் .eml என்ற துணைப் பெயருடன், அந்த பார்மட்டில் இருக்கும். இதனைப் படிக்க இயலும் எந்த புரோகிராம் மூலமாகவும், மெயில்களைப் படிக்கலாம். மேலும் இது குறித்து தகவல்கள் வேண்டும் எனில், http://www.gmail-backup.com/என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

மசால் தோசை - சமையல்!






தேவையானவை:


தோசை மாவு - 2 கப் (மசால் செய்ய) பெரிய உருளைக்கிழங்கு - 3, தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், சோம்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1 கப்.


துவையலுக்கு:


தேங்காய் துருவல் - அரை மூடி, பச்சை மிளகாய் - 4, உப்பு, இஞ்சி - ஒரு சுண்டைக்காய் அளவு, பூண்டு - 2 பல்.

செய்முறை:


 ஆலு வெந்தயக்கீரை தோசைக்கு சொன்ன மாதிரியே, தோசை மாவு தயார்செய்து கொள்ளவும். பொட்டுக்கடலையைப் பொடி செய்யவும். அடுத்ததாக, மசாலாவுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, சிறிது கட்டியும் தூளுமாக உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும்.


வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி சோம்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, 1 சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். பின் உப்பு சேர்க்கவும். வெங்காயம் வெந்ததும், உதிர்த்த கிழங்கையும் சேர்த்து கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.


துவையலுக்கு கூறியுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை மெல்லிய தோசையாக ஊற்றி எண்ணெயை சுற்றிவர ஊற்றி மூடிவிடவும். தோசை வெந்ததும், அடுப்பை குறைந்த தணலில் வைத்து, ஸ்பூனால் துவையலை எடுத்து தோசை மேல் தடவவும். பின் பொட்டுக்கடலை மாவை தூவி, அதன் மேல் உருளைக்கிழங்கு மசால் வைத்து மறு பாதி தோசையை மடக்கவும். சூடாக எடுத்து பரிமாறவும். சாப்பிட்ட எல்லோரும் ‘ஒன்ஸ்மோர்’ கேட்பார்கள்.