Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 22 December 2013

எட்டு வடிவ நடைபயிற்சி செய்யும்முறை?




 ஒரு அறையில் அல்லது வெட்டவெளியில் கிழக்குமேற்காக 10 அடி விட்டு கோடு வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும். இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்குநோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்யவேண்டும். 15 நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கபட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.


பயன்கள் பல...

இளமையாக இருக்கலாம் ...


சர்க்கரை நோய் குறையும்.


தலைவலி, மலச்சிக்கல் தீரும்


சளியிலிருந்து விடுதலை


கண்பார்வை அதிகரிக்கும்


செவிகள் நன்றாக கேட்கும்


இரத்த அழுத்தம் குறையும்...இன்னும் நிறைய இருக்கிறது.

- மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

   

பப்பாளி பழத்தின் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. அழகை அழகூட்டும் பப்பாளியைப் பற்றி இன்னும் சில அழகு டிப்ஸ்....


* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் 'ப்ரெஸ்' ஆக காணப்படுவீர்கள்.

* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.

* தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.

* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.

* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.

* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.

* 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

* பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.

* பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

* பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.

தூக்கம் வரலையா?




ஓர் இரவு முழுவதும் உங்களால் தூங்காமல் இருக்க முடியுமா? யாராக இருந்தாலும் சான்சே இல்லை என்ற பதில்தான் வரும். ஆனால், உலகில் 7  முதல் 18 சதவீதம் பேர் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் இவர்களில் 3 முதல் 13 சதவீதம் பேர் தூக்கம் மற்றும் மன அமைதிக்கான  மாத்திரைகளை உட்கொண்டால்தான் உறங்க முடிகிறது என்றும் அறிவிக்கிறது மருத்துவ ஆய்வு.

ஒரு நாளில் 7 முதல் 10 மணி நேரம் தூங்கினால், உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். அது குறைந்தாலோ, கூடினாலோ ஏதோ ஒரு  நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்பதை உணர்ந்து உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. குழந்தைகள் அதிகம் தூங்குவதையோ,  முதியவர்கள் மிகக்குறைவாக தூங்குவதையோ பிரச்னையாக கருதத் தேவையில்லை.

குழந்தைகள் 16 மணி நேரம் வரை கூட உறங்குவார்கள். முதியவர்கள் 4 மணி நேரம் ஆழ்ந்து தூங்கினாலே, அது அவர்கள் வயதுக்கு நல்ல  தூக்கம்தான்.

ஸ்கேன் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்





நவீன மருத்துவ உபகரணங்களில் ஸ்கேன் முக்கிய இடம் பெறுகிறது அவற்றின் விபரம் வருமாறு.

டெஸ்டா எம்ஆர்ஐ ஸ்கேன்

காந்த அதிர்வை உடலில் செலுத்தி தேவைப்படும் பாகங்களை குறுக்கு வெட்டாக துல்லியமாக படம் பிடித்து கட்டிகளை கண்டறிய உதவுகிறது.

சிடி ஸ்கேன்

தலைப்பகுதியின் உட்பாகங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இந்தக் கருவியின் மூலமாக மட்டுமே துல்லியமாக கண்டறியமுடியும். எக்ஸ்ரேயில் தெரியாத தலையின் எலும்பு உள்பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன் மூலம் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இந்த கருவி மிகவும் விலை உயர்ந்தது என்பதால் குறிப்பிட்ட பெரிய மருத்துவமனைகள் அல்லது பெரிய மருத்துவ பரிசோதனை கூடங்களில் மட்டுமே உள்ளன.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

உடலின் உள் அமைப்புகளை முப்பரிமான முறையில் கண்டறிய முடியும். குறிப்பாக திரவப் பகுதியில் ஊடுருவி உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலை போன்றவற்றை கண்டறிய மிகவும் உதவுகிறது.

கலர் டாப்லர் ஸ்கேன்.

ரத்த குழாய்கள் வழியாக ஊசி மூலம் மருந்து செலுத்தி குறைபாடுகளை துல்லியமாக கண்டறிய பயன்டுகிறது.

எக்கோ

இருதய செயல்பாடுகளை கண்டறிய பயன்படும் கருவி, நுண் அதிர்வுகள் மூலம் இருதய திறனை கண்டறிந்து குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சை அளிக்க முடியும்.

டிரெட் மில் டெஸ்ட்(டிஎம்டி)

வயதிற்கு ஏற்ப இருதய துடிப்பு செயல்பாடுகளை இதன் மூலம் கண்டறியமுடியும். டிரட்மில் கருவியில் வேகமாக நடக்க வைத்தும், ஒட வைத்தும் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் இருதய பலம், பலவீனம் கண்டறிய முடியும்.

இசிஜி


இருதய துடிப்பு சீராக இருப்பதை கண்டறிய இது பயன்படுகிறது.

டிஜிட்டல் இசிஜி

இருதயத்தின் நான்கு அறைகளில் உள்ள செயல்பாடுகளையும் துல்லியமாக கண்டறிய முடியும்.



டிஜிட்டல் எக்ஸ்ரே

சாதாரண எக்ஸ்-ரே கருவியை விட இது துல்லியமாக உடலின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறது.

மோமோ கிராம்

பெண்களுக்கு ஏற்படும் மார்பக குறைபாடுகளை கண்டறிய முடியும் குறிப்பாக பெண்களுக்கு அதிகம் ஏற்படும் மார்பக கட்டிகள், மார்பக புற்றுநோய், போன்ற குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

மாஸ்டர் ஹெல்த செக் அப்

மாஸ்டர் ஹெல்த் செக்-அப் என்ற பெயரில் பல மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் பல உடற்பகுதிகள் பரிசோதனை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மருத்துவமனையிலும் பல்வேறு கட்டண விகிதங்களிலும் செய்யப்படுகிறது. உலக இருதய நோய் தினம், நீரிழிவு நோய் தினம், போன்ற சில முக்கிய மருத்துவ தினங்களில் சிறப்பு சலுகை கட்டணங்களில் மாஸ்டர் செக்அப் செய்யும் மருத்துமனைகளும் உண்டு. தேராயமாக 1000 முதல் 5000 வரை முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ரூ10 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் கட்டணங்களில் சிறப்பு மருத்துவ உடற்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.